Saturday, March 28, 2009

அமைவு

உலகிலேயே இந்துசமயம் இந்துசமுத்திரத்தை சேர்ந்த நாடுகளிலே அதிகளவு காணப்படுகிறது.இந்துசமயமானது பலபிரிவுகளை கொண்டது அதில் ஒன்றே சைவசமயம்.இது சிவனை முழுமுதற்கடவுளாக கொண்டது.நமது இலங்கையானது சிவபூமியாகும்.சிவபூமியின் வடக்கே குடா ஒன்று காணப்படுகிறது.அதுவே யாழ்ப்பாணம் ஆகும்.இது தமிழ்சைவ கலாச்சார பூமியாகும்.இதன் வடக்கே வடமராட்சி என்னும் பிரிவு உண்டு.இங்கு கல்வியும் வீரமும் தமிழ் கலாச்சாரமும் நிறைந்து காணப்படும்.அந்த வீரபூமியின் மத்தியில் கருணையம்பதி என்னும் அழகான கிராமம் உண்டு.அங்கு தான் வயல்வெளிகள்,பனம்கூடல்கள்,மரங்கள் சூழ எனது அம்மன் இயற்கையோடு ஒன்றித்து காட்சி கொடுக்கின்றார்


இங்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் விளக்கீட்டு பூசை நடைபெறும்.இது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்


இவ்வாலய முக்கிய நிகழ்வுகள்

1>மகாசிவராத்திரி
2>ஒவ்வொரு மாதபௌர்ணமி விளக்கீடு
3>திருவிழா 10 நாட்கள்
4>ஆடிபூர திருவிழா
5>நவராத்திரி பூசை
6>மானம்பு திருவிழா
7>கார்திகை விளக்கீடு
8>திருவெம்பா


மகாசிவராத்திரி

இவ் விழாவானது மாசி மாதம் வரும்.
இது சிவனுக்குரிய விழாவாகும்.ஆனாலும் இங்கு மிகவிமர்சையாக நடைபெறும்.இரவு இரவாக பூசை நடைபெறும்.அதுமட்டும் இல்லாமல் சிறப்பு நிகழ்வாக நமது பழம் கலாச்சார கூத்துக்களும் நடைபெறும்.இதற்காகவே இங்கு கலைகலாச்சார மண்டபம் ஒன்றும் உள்ளது.மண்டபத்துக்கு முன்பாக பின்னேரங்களில் இளைஞர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கிளிதட்டு விளையாடுவார்கள்
ஒவ்வொரு மாதபௌர்ணமி விளக்கீடு

இவ்நிகழ்வு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் நடைபெறும்.இது முக்கிய நிகழ்வாகும்.இவ் நாளில் அம்மன் தாமரை வாகனத்தில் வீதி உலாவந்து கோயில் மண்டபத்தில் அமர்ந்ததும் விளக்கீட்டு பூசை ஆரம்பமாகும்.மண்டபத்தில் மங்கயர் 108 விளக்கு கொளுத்தி குங்கும அர்சனை செய்வர்


குருக்கள் மந்திரம் சொல்ல மங்கயரும் மந்திரம் சொல்லி குங்கும அர்சனை செய்வர்.இதன் பலன்கள் அம்மன் அருளால் மங்கயருக்கு வேண்டிய காரியம் சிறப்பாக நடைபெறும்.உதாரணமாக வரன்,புத்திர பாக்கியங்கள் கிடைக்கப்பெறும்.இது உண்மையாகும் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மங்கயர் பயன் பெற்றுள்ளனர்.இவ் புகழ்ழறிந்து யாழ்ப்பாணத்திலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் பலர் வருகின்றனர்